







எங்களை பற்றி
அலர் வெளியீடு
தமிழ் இலக்கிய மரபை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பதிப்பகம்.
ஒரு மொழியில் புதிய நூல்களின் வரவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஏற்கெனவே வெளிவந்த நூல்கள் மறுபதிப்பு செய்யப்படவேண்டியதும் முக்கியம். கால வெள்ளத்தில் கரையொதுங்கும் நூல்கள் அதன்பின் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
மானுடத்தின் மேன்மைக்கும் அறிவுத் துறையின் வளர்ச்சிக்கும் உண்மையான பங்களிப்பை நல்கக்கூடிய இலக்கியங்களும் பல்துறை ஆய்வுகளும் அவ்வப்போது மறுபதிப்பு செய்யப்பட்டு அடுத்து வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட பதிப்பகம் தான் அலர் வெளியீடு.
புதுமைப்பித்தன் காப்பகம் என்பது அலர் வெளியீட்டின் ஒரு முயற்சி. நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் படைப்புகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாத்து, அனைவருக்கும் இலவசமாக வழங்குவதே இந்த காப்பகத்தின் நோக்கம்.
Publisher
அலர் வெளியீடு
முகவரி
No. 2A, White Betal Street,
Big Bazaar,
Tiruchirappalli - 620008
தொலைபேசி
மின்னஞ்சல்
info@alarveliyeedu.com